ஆசிரியை உமாதேவிக்கு உரிய மகப்பேறுகால விடுமுறையை அளிக்க வேண்டும்

அரசுப் பணியில் சேரும் முன் முதல் திருமணம் மூலம் இரு குழந்தைகள் பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை, 2-வது திருமணம் செய்த பின்னர் பேறு கால விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை சென்னை உயர்…

அரசுப் பணியில் சேரும் முன் முதல் திருமணம் மூலம் இரு குழந்தைகள் பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை, 2-வது திருமணம் செய்த பின்னர் பேறு கால விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் பி.கோலப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் உமாதேவி, பேறுகால விடுப்பு கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், அரசாணைப்படி இரு குழந்தைகளுக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் எனக் கூறி, அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து உமாதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தான் அரசு பணியில் சேரும் முன்னரே முதல் கணவர் மூலமாக இரு குழந்தைகள் பிறந்ததாகவும், தற்போது அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அண்மைச் செய்தி: நடிகை மீரா மிதுனுக்கு ஏப்ரல் 4ம் தேதி வரை நீதிமன்ற காவல்

தற்போது ராஜ்குமார் என்பவரை மறுமணம் செய்துள்ள நிலையில், பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், மகப்பேறு பலன்களைப் பெறுவதற்காக குழந்தைகளின் எண்ணிக்கையில் மத்திய சட்டம் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்காத வரை, வேறு எந்த விதியும் அல்லது விதிமுறைகளும் அத்தகைய கோரிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டார்.

இதனையடுத்து ஆசிரியை உமாதேவிக்கு உரிய மகப்பேறுகால விடுமுறையை அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தாய்மையின் முக்கியத்துவத்துவம் மற்றும் ஆழமான புரிதலால், பேறுகால விடுப்பை 12 மாதங்களாக உயர்த்திய மாநில அரசை உயர்நீதிமன்றம் பாராட்டுவதாகவும் நீதிபதி பார்த்திபன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.