GST இழப்பீட்டை நீட்டிக்க வேண்டும் – விசிக எம்.பி ரவிக்குமார்

மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி இழப்பீடு 2022 ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் அதை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி.ரவிக்குமார்…

மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி இழப்பீடு 2022 ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் அதை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி.ரவிக்குமார் பேசுகையில், மாநிலங்களில் ஜிஎஸ்டி காம்பென்சேஷன் இல்லையென்றால், மிகப்பெரிய நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என தெரிவித்தார். மேலும் 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்ரி காம்பென்சேஷனை நீட்டிக்க வேண்டும் என தெரிவித்த அவர்,

கடந்த முப்பது, நாப்பது ஆண்டுகலாக ஓய்வு பெற்ற, வங்கி ஊழியர்களுடைய ஓய்வூதியம் மாற்றப்படாமலே உள்ளது எனத் தெரிவித்தார். மேலும், இதனால் பல லட்சக் கணக்கான ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்படுவதாகவும், அதனை சரிசெய்ய நிதியமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

அண்மைச் செய்தி: இரண்டாவது திருமணம் செய்த பின்னர் பேறு கால விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது

https://twitter.com/news7tamil/status/1507302768200933380

இதேபோல, பல ஆண்டுகலாக மாற்றப்படாமல் உள்ள, மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்தை மாற்றி உயர்த்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கபடுவதாக தெரிவித்த அவர், அதனை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.