நடிகை மீரா மிதுனுக்கு ஏப்ரல் 4ம் தேதி வரை நீதிமன்ற காவல்

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பட்டியல் இன மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை…

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பட்டியல் இன மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நடிகை மீரா மிதுன் மீது, மொத்தமுள்ள 4 வழக்குகளில் இதுவரை 3 வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனையடுத்து வெளியில் வந்த மீரா மிதுன் பின்னர் முறையாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், நேற்று அவருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

அண்மைச் செய்தி: “கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தாலும்” அதை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிடும்

பின்னர், அவரை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆஜர் படுத்தினர். அப்போது மீரா மிதுனை ஏப்ரல் 4ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.