முக்கியச் செய்திகள் தமிழகம்

T23 புலியை பிடிக்கும் பணி 20 ஆவது நாளாக தொடர்கிறது

போஸ்பரா , கார்குடி பகுதியில் சுற்றி வரும் T23 புலியை பிடிக்கும் பணி, 20 ஆவது நாளாக தொடர்கிறது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா, தேவன் எஸ்டேட் பகுதியில் 40 க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் நான்கு பேரை கொன்ற T23 புலியை பிடிக்க பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதை அடுத்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர்.

இதனையடுத்து ஆட்கொல்லி புலியை பிடிக்க தமிழகம், கேரள மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர், 8 கால்நடை மருத்துவர்கள், 2 கும்கி யானைகள், 3 மோப்ப நாய்கள், வனப்பகுதியில் 80க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள், டிரோன் கேமரா மூலம் மசினகுடி வனப் பகுதியில் தேடியும் யார் கண்ணிலும் சிக்காமல் T23 புலி போக்கு காட்டி வந்தது. இந்நிலையில் நேற்றுமுன் தினம் போஸ்பரா பகுதிக்கு புலி இடம் பெயர்ந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர்.

புலி இருக்கும் இடத்தை உறுதி செய்த வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அதை பிடிக்க முயன்றனர். அப்போது T23 புலி அடர்ந்த புதர் பகுதிக்குள் மறைந்து கொண்டதால் புலியை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் அறிவித்துள்ளார்.

போஸ்பரா வனப்பகுதிக்குள் கால்நடை மருத்துவக் குழு வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறையினர் நான்கு குழுக்களாகப் பிரிந்து 20 வது நாளாக புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

குழந்தைகள் காப்பகத்தில் 10 சிறுமிகளுக்கு கொரோனா – காப்பகம் மூடல்!

Vandhana

வேளச்சேரி மறுவாக்குப் பதிவில் ஆண்களுக்கு மட்டுமே வாக்கு: தேர்தல் அதிகாரி

Ezhilarasan

“பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிட முடியாது” : தினேஷ் குண்டுராவ்

Halley karthi