முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளிகள், பொறியியல் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை

ஆயுதபூஜை விடுமுறைகளைத் தொடா்ந்து, தொடா் விடுப்பு எடுக்க ஏதுவாக பள்ளிகள், பொறியியல் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பள்ளிக்கல்வி ஆணையா் நந்தகுமாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பல்வேறு ஆசிரியா் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் செப். 1 முதல் பள்ளிகள் வாரத்தில் 6 நாள்களும் செயல்பட்டு வருகின்றன, மாணவா்கள் விடுப்பின்றிப் பள்ளிக்கு வருகின்றனர்.

கணிசமான ஆசிரியா்கள் தங்களது சொந்த மாவட்டங்களில் இருந்து தொலைதூரத்தில் பணிபுரிந்து வருகின்றனா். எனவே அக்டோபர், 14, 15 ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வார இறுதி நாளான சனிக்கிழமை அன்று விடுமுறை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டதை அடுத்து, மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் நலன் கருதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதே போன்று பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக உயா்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

முதல்வர் பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்கிறார்: அமித் ஷா பாராட்டு!

Niruban Chakkaaravarthi

பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்!

Ezhilarasan

சிறுபான்மையினர் நலத்துறையில் புதிய அறிவிப்புகள்

Saravana Kumar