குடியரசு தின நிகழ்ச்சிகான முழு ஒத்திகை இன்று நடைபெற்றது. அதில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற்றிருந்தது.
நாட்டின் 74வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கவுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின கொண்டாட்டத்தின் போது குறிப்பிட்ட கருப்பொருளை மையமாக கொண்டு மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் துறைகள் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். அதில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ஊர்திகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும்.
இந்த ஆண்டு பெண் சக்தி எனும் கருப்பொருளில் பெரும்பாலான அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, அசாம், அருணாசல பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் அலங்கரா ஊர்திகளும், ஜம்மு காஷ்மீர், லடாக், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களின் ஊர்திகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினம் நெருங்கி வருவதையொட்டி அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சிகான முழு ஒத்திகை இன்று நடைபெற்றது. அதில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற்றிருந்தது.