ஈரோடு இடைத்தேர்தல்; மனம் வேதனை பட்டாலும் கை சின்னம் போட்டியிடுகிறது- மக்கள் ராஜன் பேட்டி

ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதால் மனம் வேதனைப்பட்டாலும் கை சின்னம் போட்டியிடுகிறது என மக்கள் ராஜன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ வி கே எஸ் அறிவிக்கப்பட்ட நிலையில்…

ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதால் மனம் வேதனைப்பட்டாலும் கை சின்னம் போட்டியிடுகிறது என மக்கள் ராஜன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ வி கே எஸ் அறிவிக்கப்பட்ட நிலையில் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் மக்கள் ஜி.ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஈவியரா திருமகன் மறைந்த வடு ஆராத நிலையில்
தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்துள்ளது காங்கிரஸ் ஜனநாயக இயக்கத்தில் தான் அனைவரும் போட்டியிட வாய்ப்பு கேட்க முடியும் அகில இந்திய பொதுச் செயலாளர் நேரில் சந்தித்து நானும் போட்டியிட வேண்டும் என வற்புறுத்தி கேட்டுக் கொண்டேன்

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மனம் வேதனை பட்டாலும் கை சின்னம் போட்டியிடுகிறது.காங்கிரஸ் கட்சிக்கு எந்த களங்கமும் ஏற்படாத வகையில் காங்கிரஸ் கட்சி வெற்றிக்காக உழைப்பேன்.

ஈ வி கே எஸ் ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்கு கேட்பேன் வெற்றிபெற செய்வேன் பாஜக தலைவர் அண்ணாமலை அரைவேக்காடாக பேசுகிறார். அண்ணாமலை மாஸ் அணிந்து பேசுகின்றார் மாஸ் பின்னால் ஆர் ஆர் எஸ் உள்ளது

ஜனநாயக வழியில் வந்த நாங்கள் காங்கிரசுக்கு துரோகம் செய்ய மாட்டோம். இடைத்தேர்தலில் இது வரையில் இல்லாத வகையில் அதிகவாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம்.” என தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி.ராஜன் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.