பிப்ரவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு
உரிய இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் காவிரி டெல்டா பாசன பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பருவம் தவறி கன மழை பெய்தது. இதனால் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மற்றும் சோளம், கம்பு ,கேழ்வரகு, போன்ற பல்வேறு பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிறுவனங்கள் இதுவரை உரிய
காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. எனவே ஒன்றிய அரசு தலையிட்டு ,
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் கையில் நெற்பயிர்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து குறை தீர்வு நாள் கூட்டத்திலும் கலந்து கொண்ட விவசாயிகள் முறை வைக்காமல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமாவிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ரெ.வீரம்மாதேவி







