மலேசியாவில் உலகத் தமிழ் மாநாடு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு!

மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறும் 11 ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தனிநாயகம்அடிகளார் உள்ளிட்ட தமிழறிஞர்களின் முயற்சியால் டெல்லியில் 1964 இல் உருவானதுஉலகத் தமிழ்…

மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறும் 11 ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தனிநாயகம்அடிகளார் உள்ளிட்ட தமிழறிஞர்களின் முயற்சியால் டெல்லியில் 1964 இல் உருவானதுஉலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். உலகத் தமிழறிஞர்களை ஒன்றிணைத்து அவர்களது ஆராய்ச்சிகளை உலகறியச்செய்யும் வகையில், உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசியாவின் மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 21 முதல் 23 வரை நடைபெறுகிறது. இணைய காலகட்டத்தில் தமிழ் மொழி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இம்மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பை ஏற்றுள்ள அவர், உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி 12 ஆவது உலகத் தமிழ் மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.