முக்கியச் செய்திகள் சினிமா

அஜித்தும் விநாயகர் சென்டிமெண்டும்….

பொதுவாக பண்டிகை காலங்களில் ஒலிபெருக்கிகளிலும் சரி தொலைக்காட்சிகளிலும் சரி அந்த விழாவையொட்டி சம்மந்தபடுத்தி பாடல்களும், திரைப்படங்களும் ஒலி/ஒளிபரப்புவது என்பது அனைவரும் அறிந்ததே..

அந்த வகையில் பொங்கல் தினம் என்றால் கமல் நடிப்பில் வெளிவந்த மகாநதி திரைப்படத்தில் இடம்பெறும் பொங்கலோ பொங்கல் , பொங்கலோ பொங்கல் மற்றும் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி திரைப்படத்தில் இடம்பெறும் போக்கிரி பொங்கல் என இந்த பாடல்கள் எல்லாதிசைகளிலும் காதில் ஒலிக்கும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விநாயகர் சதுர்த்தி திருவிழா என்றாலே சத்யராஜ் மற்றும் ரகுமான் நடித்து வெளியான உடன்பிறப்பு திரைப்படத்தில் வரும் ‘சாமி வருது சாமி வருது வழிய விடுங்கடா புது பாட்டு படிச்சு வேட்டு வெடிச்சு பாட்டு படிங்கடா’ என்ற பாடலும் சிவக்குமார் நடித்திருக்கும் சிந்துபைரபி திரைப்படத்தில் இடம்பெறும் மகாகணபதி என்ற பாடல் மட்டுமே இருந்தநிலையில் தொடர்ச்சியாக அஜித் பாடல்கள் அதனை பின்னுக்கு தள்ளியது.

விநாயகர் சதுர்ச்சி என்றாலே அஜித் பாடல்கள் இல்லாத ஆட்டோ ஸ்டாண்டுகளும், தொலைக்காட்சிகளும் இல்லாத ஒரு நிலைக்கு வந்தது. பொதுவாக அஜித் திரைப்படம் வெளியாகும் தருணத்தில் திருப்பதி சென்று ஏழுமலையான வழிபடுவது என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் அதையும் தாண்டி விநாயகருக்கும் அவருக்குமான சென்டிமெண்டுகள் அஜித்தின் திரைப்படங்களில் அதிகம் காணலாம்.

வான்மதி திரைப்படத்தில் ’பிள்ளையார்பட்டி ஹீரோ நிதான்பா கணேசா’ என்ற தேவா குரலில் ஒலிக்கும் அந்த பாடல் பட்டி தொட்டியலாம் வெகுஜன மக்களிடமும் முணுமுணுக்க வைத்தது.

பின் அமர்க்களம் திரைப்படத்தில் ’மகாகணபதி’ என்ற பாடலும் ஹிட்டானது பின் அஜித்தின் முகமும் விநாயகரின் யானைமுகம் போன்று ஏறுமுகமானது மங்காத்தா திரைப்படத்தில் கூட அஜித்தின் பெயர் ’விநாயக்’ என்பது கூட ரசிகர்களிடையே அஜித் விநாயகர் சென்டிமெண்ட்டான மனிதன் என்று அரசல்புரசலாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

பின் அதனை உறுதி செய்யும் விதமாக சில வருடத்திற்கு முன் வெளியான வேதாளம் திரைப்படத்தில் ’வீர விநாயகா வெற்றி விநாயகா’ என்ற பாடல் மற்றும் அந்த படத்தில் அஜித் பெயர் கூட கனேஷ் என்றே இருக்கும். மேலும் வீரம் படத்தில் அஜித்தின் பெயர் ஒட்டன்சத்திரம் விநாயகம் என்று இருப்பது விநாயகர் மீது சென்டிமெண்டாக அஜித்திற்கு Personal Bond இருக்கிறது என்பதை அவரது திரைப்படங்களில் சொல்லாமல் சொல்லி இருப்பதை நாம் காணலாம்.

– மா.நிருபன் சக்கரவர்த்தி

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு?: முதலமைச்சர் ஆலோசனை!

Gayathri Venkatesan

கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை

Gayathri Venkatesan

6 மாதங்கள் சிறை தண்டனை; லிங்குசாமி மேல்முறையீடு

EZHILARASAN D