“அரசியல் ஸ்டண்ட் செய்ய வேண்டாம்”

இலங்கைக்கு வழங்கும் உதவிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 4 நாள் பயணமாக காங்கிரஸ் அழப்பின் பேரில் இலங்கைக்கு சென்றுள்ளார். அந்த…

இலங்கைக்கு வழங்கும் உதவிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 4 நாள் பயணமாக காங்கிரஸ் அழப்பின் பேரில் இலங்கைக்கு சென்றுள்ளார். அந்த வகையில் கொழும்புக்கு சென்ற அவர், அங்கிருந்து இன்று மாலை நுவரெலியாவிற்கு தனது பயணத்தினை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இலங்கைக்கு மத்திய அரசு வழங்கும் உதிவிகள் குறித்து, மாநில அரசான தமிழ்நாடு வழங்கும் உதவிகள் குறித்தும் அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

https://twitter.com/annamalai_k/status/1520606865951891456

இது குறித்து அவர் எழுதியுள்ள கடித்ததில், இலங்கைக்கு அரிசி, மருந்துப்பொருட்கள் அனுப்புவோம் என்ற தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை பாஜக உண்மையிலேயே வரவேற்கிறது. ஆனால் ஏற்கனவே மத்திய அரசு, இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. பல பில்லியன் டாலர் பொருளாதார உதவி, கச்சா எண்ணெய், அரிசி, மளிகைப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் என்று இலங்கைக்கு, மத்திய அரசு தொடர்ச்சியாக உதவி வருகிறது

2009-ல் இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், திமுக எதையும் செய்யாமல் வேடிக்கை பார்த்தன. 2009-ல் 2 மணி நேர உண்ணாவிரதம் என்ற அரசியல் ஸ்டண்ட் மேற்கொண்டது போல், இப்போது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கு உதவுவதாக இருப்பின், மத்திய அரசு வாயிலாகவே உதவவேண்டும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.