10 ஓவர்களில் வெறும் 31 ரன்கள் எடுத்து திணறும் இலங்கை… 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிராஜ் அசத்தல்…

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா மற்றும் இலங்கை அணிகளின் போட்டியில் சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இலங்கையின் கொழும்புவில், 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த…

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா மற்றும் இலங்கை அணிகளின் போட்டியில் சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இலங்கையின் கொழும்புவில், 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இலங்கை அணியும், இந்திய அணியும் விளையாடிவருகிறது.

ஆசிய கோப்பை 2023 மூலம் இந்திய அணி 10 முறையாகவும், இலங்கை அணி 12வது முறையாகவும் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளன. ஆசிய கோப்பையில் இரு அணிகளும் இதுவரை 7 முறை இறுதிப்போட்டிகளில் மோதியுள்ளது. அதில், அதிகபட்சமாக இந்திய அணி 4 முறையும், இலங்கை அணி 3 முறையும் கோப்பைகளை வென்றுள்ளது.

கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய இறுதி போட்டியில், கோப்பையை தக்க வைக்கும் முயற்சியில் இலங்கை வீரர்களும், 8-வது முறையாக சாம்பியனாகும் முனைப்பில் இந்திய வீரர்களும் விளையாடிவருகின்றனர்.

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை, அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. போட்டியில் டாஸ் மட்டும் போடப்பட்டுள்ள நிலையில், மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் போட்டி தொடங்குவதலில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் போட்டி 3.40 மணிக்கு துவங்கப்பட்டது.

பின்னர் தொடங்கிய போட்டியில் இலங்கை அணி தனது முதல் ஓவரில் தொடக்க ஆட்டக்காரரான குசல் பெரேரா விக்கெட்டை பும்ரா பந்து வீச்சில் இழந்தது. போட்டியின் இரண்டாவது ஓவரை வீசிய முகமது சிராஜ் அதனை மெய்டனாக வீசினார். தொடர்ந்து 4வது ஓவர் வீசிய சிராஜ் ஓவரில் முதல் பந்தில் நிசாங்கா ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்து 3, 4வது பந்துகளில் சமரவிக்ரமா, அசலங்கா ஆட்டமிழந்தனர். அடுத்து கடைசிப் பந்திலும் தன்ஞ்செயாவும் டக்கவுட் ஆனார். இந்த நான்காவது ஓவரில் மட்டும் விக்கெட், ரன் இல்லை, விக்கெட், விக்கெட், பவுண்டரி, விக்கெட் என கணக்கை முடித்துவைத்தார்.

அடுத்து 6வது ஓவர் வீசிய சிராஜ் ஓவரில் இலங்கை கேப்டன் ஷானகா போல்ட்டானார். 4 வீரர்கள் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 6 ஓவர் முடிவில் இலங்கை அணி 13/6 ரன்கள் எடுத்துள்ளது. சிராஜ் 5 விக்கெட்டுகளும் பும்ரா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள். இந்திய அணி பெரிய மிக சுலபமாக வெற்றி பெற இது போதுமான காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.