14 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி!

14 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானில் விளையாட சென்றுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இரண்டு…

14 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானில் விளையாட சென்றுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட மீண்டும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்து அச்சத்தின் காரணமாக பெரும்பாலான அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்தன.

தற்போது வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு 14 ஆண்டுகள் கழித்து தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் விளையாட சென்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply