மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு பாடிய ‘ராசா கண்ணு’ பாடல் குறித்து நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் ‘மாமன்னன்’ படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ’ராசா கண்ணு’ நேற்று வெளியானது. யுகபாரதி எழுதியுள்ள இந்தப் பாடல் வடிவேலுவின் குரலில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த பாடல் குறித்து நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த பதிவில் “தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன், மனதை என்னமோ செய்கிறது இந்த பாடல். படக்குழுவினர்க்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன், மனதை என்னமோ செய்கிறது இந்த பாடல் #RaasaKannu – https://t.co/pmmhUPuaL3#MAAMANNAN படக்குழுவினர் க்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் @Udhaystalin@mari_selvaraj @arrahman #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil @RedGiantMovies_ @thenieswar pic.twitter.com/c2eCRUMQZ8
— Actor Soori (@sooriofficial) May 20, 2023
இந்த பாடல் வெளியான முதல் நாளே லட்சகணக்கில் பார்வையாளர்களை கவர்ந்தது. வடிவேலுவின் குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மேலும் இந்த பாடல் ரசிகர்களிடன் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.







