ரூ.2000 செல்லாது என்ற அறிவிப்பு: பணத்தாள்களின் மீதான நம்பிக்கை இழக்கச்செய்யும் – திருப்பூர் தொழில் துறையினர்!

ரூ.2000 திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது பணத்தாள்களின் மீதான நம்பிக்கையை இழக்க செய்வதாக திருப்பூர் தொழில் துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர் நேற்றைய தினம் ரூ.2000 நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் செல்லாது…

ரூ.2000 திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது பணத்தாள்களின் மீதான நம்பிக்கையை இழக்க செய்வதாக திருப்பூர் தொழில் துறையினர் வேதனை
தெரிவித்துள்ளனர்

நேற்றைய தினம் ரூ.2000 நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் செல்லாது எனவும் அதற்கு முன்னதாக வங்கிகளில் தங்களது 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து கொள்ளலாம் எனவும் தினந்தோறும் 20000 ரூபாய் வரை பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என புதிய ஐநூறு ரூபாய் நோட்டு மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிவித்தது.

தற்போது மீண்டும் அதே 2000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தது குறித்து திருப்பூர் தொழில் துறையினர் தெரிவிக்கும்போது மத்திய அரசு சுழற்சி முறையில் இது போன்ற அறிவிக்கும் போது பணத்தாள்களின் மீதும் மத்திய நிதி அமைச்சகத்தின் மீதும் சந்தேகம் ஏற்படுவதாக கூறினர்.

மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசுக்கு பெரும் பொருளாதார செலவு ஏற்பட்டிருக்கும் எனவும் அவை அனைத்தும் மக்கள் மீது விழும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டனர். ஏற்கனவே திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில்பொருளாதார சூழல் சாதகமாக இல்லாத நிலையில் இது போன்று அவ்வப்போது வெளியிடப்படும் அறிவிப்புகளால் பொருளாதார மந்த நிலை ஏற்படுவதோடு பண புழக்கமும் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.