‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படபிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஒரு புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படம் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக மோனிஷா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.