சீனாவில் கொரோனா பரவல் தீவிரம் – உலக சுகாதார அமைப்பின் தலைவர் கவலை

சீனாவில் புதிய வகை கொரோனா அதிவேகமாக பரவி வருவதற்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனாவின் புதிய திரிபுகளான ஒமைக்ரான் பிஎஃப் 7 மற்றும் பிஏ…

சீனாவில் புதிய வகை கொரோனா அதிவேகமாக பரவி வருவதற்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனாவின் புதிய திரிபுகளான ஒமைக்ரான் பிஎஃப் 7 மற்றும் பிஏ 5.2 ஆகிய தொற்றுகள் வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சீனாவில் காட்டுத்தீ போல கொரோனா மீண்டும் அதிவேகத்தில் பரவி வருவதற்கு உலக சுகாதர அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடும் பணிகளில் தேக்கநிலை காணப்படுவதால் சீனாவில் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகரித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனால் ஏற்படும் பேரழிவுகளை கணிக்கவும் மதிப்பிடவும் இன்னும் விரிவான தகவல்கள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்த போதிலும், பெருந்தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டதாக கூற முடியாத நிலையே உள்ளது என்றும் டெட்ரஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.