ரஷ்யாவிலிருந்து இரண்டாவது கட்டமாக, 30 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் ஐதராபாத் வந்தடைந்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்ய மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ரெட்டி லேபரேட்டரீஸ் நிறுவனம், ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அனுமதி பெற்றது. அதன்படி, கடந்த வாரம் 1.50 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் ஐதராபாத் வந்தன.
இந்த நிலையில், இரண்டாவது கட்டமாக 30 லட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள், இன்று அதிகாலை ஐதராபாத் வந்து சேர்ந்தன.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசி ஆகியவை, ஏற்கனவே நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மூன்றாவதாக ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு, மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







