தமிழ்நாடு மின்வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மின் பகிர்மான கழக மேலாண்மை இயக்குநராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 7 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து முதல்வரின் தனிச் செயலாளர் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். மேலும் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானியை நியமித்து தமிழ அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைத் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பிறபித்துள்ளார்.
ராஜேஷ் லக்கானி பல அரசுப் பணிகளில் பணியாற்றி உள்ளார். ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மை செயலாளராகவும் அவர் பதவி வகித்தார்.







