‘தமிழ்நாடு இருண்ட ஆட்சியில் இருந்ததற்கு சமத்துவபுர திட்டம் கிடப்பில் போடப்பட்டதே சிறந்த உதாரணம்’

வானூர் அருகே உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டம், கொழுவாரி ஊராட்சியில் 2 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது.…

வானூர் அருகே உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், கொழுவாரி ஊராட்சியில் 2 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அங்குள்ள பயனாளியுடன் இணைந்து திறந்து வைத்தார். அதன் பிறகு சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர், அங்கு கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து சமத்துவபுரம் வளாகத்தில் அமைக்கப்பட்டு விளையாட்டு மைதானத்தில் இளைஞர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைப்பந்து விளையாடினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பன், மஸ்தான், மாவட்ட ஆட்சியர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்தி: ‘தேசிய சுத்தமான காற்று திட்டத்தில் சென்னை ஏன் சேர்க்கப்படவில்லை’

இதனை தொடர்ந்து, ஒழிந்தியாப்பட்டு ஊராட்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, 10,722 பயனாளிகளுக்கு 42 கோடியே 69 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அப்போது விழாவில் பேசிய அவர், கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட சமத்துவபுரத்தை அவரது மகனாக திறந்து வைத்தில் தமக்கு மகிழ்ச்சி என குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு இருண்ட ஆட்சியில் இருந்ததற்கு சமத்துவபுர திட்டம் கிடப்பில் போடப்பட்டதே சிறந்த உதாரணம் என சாடினார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அனைத்து சமத்துவபுரங்களும் சீரமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.