கல்வி, வேலைவாய்ப்புகளில் எந்த மாநிலத்திற்கும் சளைத்தது அல்ல தமிழ்நாடு என்ற நிலையை நம்மால் அடைய முடியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பெலாகுப்பத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பில் காலணி தயாரிக்கும் துணை தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் பேசிய அவர், தொழில் வளர்ச்சி அதிகம் இல்லாத மாவட்டங்களில் தொழில் தொடங்க ஊக்கப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும், கல்வி, வேலைவாய்ப்புகளில் எந்த மாநிலத்திற்கும் சளைத்தது அல்ல தமிழ்நாடு என்ற நிலையை நம்மால் அடைய முடியும் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், மாசுவை கட்டுப்படுத்த தோல் இல்லாத காலணிகளை தயாரிக்க தொழில் நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். பட்டாசு மற்றும் காலணி தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் பெண்கள் அதிக அளவில் பணி புரிந்து வருவதாக குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி பெற, அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது என உறுதியளித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








