தேசிய சுத்தமான காற்று திட்டத்தில் சென்னை ஏன் சேர்க்கப்படவில்லை என மக்களவையில், தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
“மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2018-ஆம் ஆண்டு தேசிய சுத்தமான காற்று திட்ட வரைவை வெளியிட்டது. அதன்படி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 132 நகரங்கள் இதில் சேர்க்கப்பட்டன. ஆனால், அதிக மக்கள்தொகை கொண்ட சென்னை மாநகராட்சி சேர்க்கப்படவில்லை. அதேநேரம், திருச்சி, தூத்துக்குடி நகரங்கள் சேர்க்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், சென்னையும் சேர்க்கப்பட வேண்டும். சென்னை சேர்க்கப்படுமா?” என எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் இன்று கேள்விநேரத்தின்போது, கேள்வி எழுப்பினார்.
அண்மைச் செய்தி: ‘மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வரலாறு’
இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பதில் அளிக்கையில், மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிடும் காற்றின் தரக்குறியீட்டு அளவுகோலின் அடிப்படையிலேயே சுத்தமான காற்று திட்டத்துக்கு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த குறியீட்டில் சென்னையில் சுத்தமான காற்று வீசுவதாக தெரிவித்த அவர், இதனால்தான் சென்னை அதில் சேர்க்கப்படவில்லை” என்று கூறினார். மேலும், இதற்காக சென்னை மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் தெர்வித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: