“கார்கில் வீரர்களின் தியாகம் இந்தியாவின் வரலாற்றில் என்றென்றும் பொற்குறியீடாக நிலைத்திருக்கும்” – நயினார் நாகேந்திரன்!

வீரர்களின் வீரச் செயல்களுக்கும் அளப்பரிய தியாகத்திற்கும் இந்திய தேசம் என்றும் நன்றிக்கடன்பட்டே இருக்கும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கார்கில் விஜய் திவாஸ் நாளையொட்டி, தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக தங்களின் இன்னுயிரை அர்ப்பணித்த அனைத்து வீரத் தியாகிகளுக்கும் நமது மரியாதையையும் பணிவான அஞ்சலியையும் செலுத்துவோம்.

1999-ஆம் ஆண்டு கார்கிலின் கடினமான, அணுக முடியாத மலைச் சிகரங்களில், இணையற்ற துணிச்சல், ஒப்பற்ற வீரம் மற்றும் அசைக்க முடியாத மன உறுதியுடன் போராடி, நாட்டின் இறையாண்மையையும் பெருமையையும் காத்த நமது வீரர்களின் தியாகம் இந்தியாவின் வரலாற்றில் என்றென்றும் பொற்குறியீடாக நிலைத்திருக்கும். அவர்களின் வீரச் செயல்களுக்கும் அளப்பரிய தியாகத்திற்கும் இந்திய தேசம் என்றும் நன்றிக்கடன்பட்டே இருக்கும்.

நமது இந்திய இராணுவத்தின் வீரமும், தன்னலமற்ற சேவையும், தாய்நாட்டிற்காக எதையும் அர்ப்பணிக்கும் உயர்ந்த பண்பும், வருங்கால தலைமுறைகளுக்கு தேசப்பற்று, கடமை உணர்வு மற்றும் தியாக மனப்பான்மையை விதைக்கும் அழியாத உந்துசக்தியாக என்றும் விளங்கட்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.