முக்கியச் செய்திகள் தமிழகம்

கோவையில் பாலத்தில் இருந்து குதித்த ரவுடி: கையும்களவுமாகப் பிடித்த போலீஸார்

கோவை ரத்தினபுரி பகுதியில் காவல் துறையிடம் இருந்து தப்பிப்பதற்காக ரவுடி
ஒருவர் பாலத்தில் இருந்து கீழே குதித்த நிலையில் போலீசாரால் கையும் களவுமாக
பிடிக்கப்பட்டுள்ளார்.

கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கடந்த மாதம் கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை
செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான தூத்துக்குடியை சேர்ந்த
பார்த்தசாரதி என்பவர் இன்று ரத்தினபுரி பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்க: “கடவுள் தனது குழந்தையுடன் தொடர்புகொள்வது போல” – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

இதையடுத்து, கோவை பந்தய சாலை காவல் நிலைய ஆய்வாளர் சாந்தமூர்த்தி தலைமையிலான போலீசார் ரவுடி பார்த்தசாரதி கைது செய்ய முற்பட்டனர். அப்போது, அவர் காவல் துறையினரிடமிருந்து தப்பி ஓட முற்பட்டுள்ளார். காவல் துறையினர் அவரை விரட்டிச் சென்ற நிலையில் ரத்தினபுரியை அடுத்த ரயில்வே மேம்பாலம் பகுதியில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றபோது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து எழுந்து நிற்க முடியாமல் இருந்த ரவுடி பார்த்தசாரதியை காவல் துறையினர் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்ததுடன் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொடியேற்றத்துடன் தொடங்கிய தசரா திருவிழா

G SaravanaKumar

கார்கில் நினைவிடத்தில் நடிகர் அஜித் மரியாதை

Dinesh A

’அந்த ஒன்றரை வருடம் என்னால் தூங்கவே முடியவில்லை’: ஜடேஜா பிளாஷ்பேக்!

Halley Karthik