தனது படத்தின் படப்பிடிப்பு குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான ‘3’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 2015ம் ஆண்டு கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடிப்பில் ‘வை ராஜா வை’ என்ற படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார். தொடர்ந்து பல்வேறு ஆல்பம், ஆவணப்படங்களை இயக்கி வந்தார். கணவர் தனுஷை தற்காலிகமாக பிரிந்து வாழ்ந்தாலும், சினிமாவில் தொடர்ந்து ஆக்டிவாக இயங்கி வருகிறார்.
தற்போது ‘லால் சலாம்’ என்ற படத்தை ஐஸ்வர்யா இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்க, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையும் படிக்க: 40 மணி நேரம் தொடர்ந்து அலைச்சறுக்கு: ஆஸ்திரேலிய வீரருக்கு குவியும் பாராட்டுகள்!
இது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெள்ளிக்கிமை நாளில் ஒரு பழமையான அம்மன் கோயிலில் படப்பிடிப்பு இனிதே தொடங்கப்பட்டுள்ளது. இதை தற்செயல் என்று சொல்லலாம். அல்லது சில சமயங்களில் கடவுள் தனது குழந்தையுடன் தொடர்புகொள்வதற்கான இனிமையான சிறிய வழிகளைக் கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
https://twitter.com/ash_rajinikanth/status/1636621569161330689?t=GXCA1DtASb_SOQBHVxsNxQ&s=08
-ம.பவித்ரா







