துணிவு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான காசேதான் கடவுளடா பாடல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் மூன்றாவது படம் துணிவு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாக உள்ளதாகக் கூறப்படும் இந்த படத்தின் வெளியீட்டை அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை வெளியிட தயாரிப்பு நிறுவனத்தை அஜித் ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ”சில்லா சில்லா” என்ற படத்தின் முதல் பாடலை கடந்த டிசம்பர் 9ஆம் தேதி படக்குழு வெளியிட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்ற இப்பாடல், இன்றும் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
இந்நிலையில் துணிவு படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. ’காசேதான் கடவுளடா’ என்ற இப்பாடல், இன்று மதியம் 2 மணிக்கு வெளியாக உள்ளது. அதன்படி இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சில்லா சில்லா பாடலை எழுதிய வைசாக் தான் ’காசேதான் கடவுளடா’ பாடலையும் எழுதியிருக்கிறார்.
’சில்லா சில்லா’ பாடலின் கொண்டாட்டமே இன்னும் ஓயாத நிலையில், துணிவு படத்தின் மற்றொரு பாடல் வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சநிலையை அடைந்துள்ளனர்.