முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

ஏரி மண் கொள்ளை என போஸ்டர் ஒட்டியவர்கள் மீது தாக்குதல்

செஞ்சி அருகே மீனம்பூர் கிராமத்தில் ஏரி மண் கொள்ளை நடைபெறுவதாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது திமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் உட்பட 5 பேர் தாக்குதல் நடத்திய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மீனம்பூர் ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த முன்வர்பாஷா உள்ளார். இவர், தொடர்ந்து ஏரியில் மண் திருட்டில் ஈடுபடுவதாக செஞ்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஊர் பொதுமக்கள் என்ற பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, தங்களிடம் ஆதாரம் உள்ளதாகவும் பேட்டி கொடுப்பதாகவும் அந்த நபர் கூறினார். இது குறித்து செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்றபோது, பேட்டி கொடுக்க வந்தவர்கள் மீது முன்வர் பாஷா மகன் லியாகத் அலி உள்ளிட்டோர் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

இதை வீடியோ பதிவு செய்ய முயன்ற செய்தியாளர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து திமுக ஊராட்சி மன்ற தலைவர் முன்வர் அலி மற்றும் அவரது மகன் லியாகத் அலியை கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு பஸ்-மோட்டார் சைக்கில் மோதியதில் ஊர்க்காவல் படைவீரர் பலி

G SaravanaKumar

டி20 போட்டி தொடரை வென்ற இந்தியா!

EZHILARASAN D

7 பேர் விடுதலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!