நடிகை கங்கனா ரணாவத் இயக்கி நடிக்கும் எமர்ஜென்சி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் கேங்ஸ்டர் படம் மூலம் அறிமுகமானவர் கங்கனா ரனாவத். மிக குறுகிய காலத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கிய கங்கனா, தாம் தூம் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். அதேபோல், தெலுங்கிலும் கங்கனா ரனாவத்துக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. சினிமாவை கடந்து அரசியல் ரீதியாக அடிக்கடி சர்ச்சையான கருத்துகள் கூறி ட்ரெண்டாகி வருகிறார் கங்கனா ரனாவத்.
இந்நிலையில் தற்போது தமிழில் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வரும் கங்கனா, எமர்ஜென்ஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தியில் உருவாகி வரும் இந்தப் படம் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்ஸி கால கட்டத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது. இதில் இந்திரா காந்தி கேரக்டரில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
https://www.youtube.com/watch?v=MzxGN2xAa-4
சமீபத்தில் கங்கனா ரணாவத் எமா்ஜென்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை நாடாளுமன்ற வளாகத்தில் நடத்த அனுமதி கோரி மக்களவை செயலாளருக்கு கடிதம் அனுப்பி பரப்பினை கிளப்பினார். தற்போது கங்கனா இயக்கிய எமர்ஜென்ஸி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படம் நவம்பர் 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







