சர்வதேச திரைப்பட விழாவில் ‘கொட்டுக்காளி’ படக்குழுவினருக்கு கிடைத்த அங்கீகாரம் -வீடியோ வைரல்!

சர்வதேச திரைப்பட விழாவில் ‘கொட்டுக்காளி’ படக்குழுவினருக்கு கிடைத்த வரவேற்பை குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனான சூரி இப்போது கொட்டுக்காளி மற்றும் இன்னொரு படத்தில் கதாநாயகனாக…

சர்வதேச திரைப்பட விழாவில் ‘கொட்டுக்காளி’ படக்குழுவினருக்கு கிடைத்த வரவேற்பை குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனான சூரி இப்போது கொட்டுக்காளி மற்றும் இன்னொரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை கூழாங்கல் படத்தின் மூலம் கவனம் பெற்ற பி எஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். அன்னாபென் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் கொட்டுக்காளி திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ள நிலையில்  தற்போது திரையிடப்பட்டு வருகிறது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் பெர்லினுக்கு சென்றுள்ளனர்.

https://twitter.com/SKProdOffl/status/1762800477434249369?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1762800477434249369%7Ctwgr%5Eede09875d3d1c16bb6f7f698480699b002e2e9a2%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fstatic.asianetnews.com%2Ftwitter-iframe%2Fshow.html%3Furl%3Dhttps%3A%2F%2Ftwitter.com%2FSKProdOffl%2Fstatus%2F1762800477434249369%3Fref_src%3Dtwsrc5Etfw

கொட்டுக்காளியின் முதல் சர்வதேச அரங்கிற்கு நன்றி என சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த பதிவில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளதாவது… பெர்லினாலே, மற்றும் நம்பமுடியாத சில பதில் நம் இதயங்களில் ஒரு நீடித்த முத்திரையை விட்டுச் சென்றது. மறக்க முடியாத தருணங்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு குவிந்து வரும் பாராட்டுக்கள் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.