ஆளுநர் பணி மக்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்பதுதான் கேள்வி? – இல.கணேசன் பேட்டி

ஆளுநர் பணி தனக்கு திருப்தி அளிப்பதாக மணிப்பூர் மற்றும் மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.   மணிப்பூர் ஆளுநரும், பொறுப்பு ஆளுநருமான இல.கணேசனின் சகோதரர் இல.கோபலனின் சதாபிஷேக விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண…

ஆளுநர் பணி தனக்கு திருப்தி அளிப்பதாக மணிப்பூர் மற்றும் மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

 

மணிப்பூர் ஆளுநரும், பொறுப்பு ஆளுநருமான இல.கணேசனின் சகோதரர் இல.கோபலனின் சதாபிஷேக விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தெலுங்கான துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். தனது சகோதரரின் 80 வது சதாபிஷேகம் விழா, திருமணம் போல் நடந்ததாக கூறினார். தானும் தமிழ்நாட்டை சேர்ந்தவன் என்பதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தேன் என கூறினார்.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது எங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருந்தேன். அதன் அடிப்படையில் இன்று மேற்குவங்க முதலமைச்சரும் வந்ததை தான் எதிர்பார்க்கவில்லை. அவர் வருகைக்கும் நன்றி என்றார்.

மணிப்பூர் முதலமைச்சருக்கு முக்கிய பணி இருப்பதால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அது மிக முக்கிய பணி என்பதால் அதை நான் புரிந்து கொள்கிறேன். ஆளுநர் பணி தனக்கு நிச்சயமாக திருப்தி தருகிறது. தனக்கு திருப்திகரமாக இருக்கிறதா? என்ற கேள்விய விட எனது மக்களுக்கு திருப்தி அளிக்கிறதா? என்பது தான் முக்கியம் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.