சோனி லைவ் ஒரிஜினல்ஸ் -ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரித்து இயக்குநர் அறிவழகன்
இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் வெப் சீரிஸ் தமிழ் ராக்கர்ஸ்.
ஆகஸ்ட் 19 முதல் இந்த வெப் சீரிஸ் வெளியாக உள்ள நிலையில் படக் குழுவினருடன்
செய்தியாளர் சந்திப்பு சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் அருண் விஜய், எம் எஸ் பாஸ்கர், மாரிமுத்து,
நடிகைகள் ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன், வினோதினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் அருண் விஜய், “இந்த கதையின் நோக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஏவிஎம் பாரம்பரிய நிறுவனம். இந்த நிறுவனம் தயாரித்த எத்தனையோ படங்களில் என் அப்பா நடித்துள்ளார். எனக்கு படம்/வெப் சீரிஸ் என்று தனியாக ஏதும் தோணவில்லை. இந்த தளத்தில் பண்ணும் போது நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. இந்த தைரியமான முயற்சியை பண்ண முன்வந்ததே பாராட்டுக்குரியது. ஒவ்வொரு விஷயத்தையும் கதை சொல்லும் போது எனக்கே
ஆச்சரியமாக இருந்தது. இந்த படத்தில் நிறைய புதிதாக செய்துள்ளோம். சைபர் கிரைம் உலகத்தில் மக்களை அழைத்து செல்வதற்காக, பல புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தினோம்” என்றார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகை வாணி போஜன் கூறுகையில், “இது நல்ல காம்போ. இந்த படத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம். சைபர் கிரைம் குறித்து நிறைய வார்த்தைகள் புரியவில்லை. இயக்குநரிடம் கேட்டு கேட்டு தான் நடித்தேன். தயாரிப்பாளரையும் தாண்டி குடும்பத்தை போல அருணா பார்த்து
கொண்டார்”என்றார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகை ஐஸ்வர்யா மேனன், படத்தில் நடித்த ஒவ்வொரு காட்சியிலும் நன்றாக உணர்ந்து, நடித்ததாகவும், படத்தில் ஒரு குறும்பான பெண் கதாபாத்திரம் தான் எனவும் கூறினார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் எம் எஸ் பாஸ்கர், “ஏவிஎம் நிறுவனம் – எனக்கு தாய் வீடு மாதிரி. எத்தனையோ நாட்கள் அங்கேயே தங்கி, சாப்பிட்டு தூங்கி இருக்கிறேன். எல்லோருடன் நடித்த அந்த ஒரு நாள் திருநாள். டிஜிட்டல் களவானிகளை பற்றி, அவர்களால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு பல வேலைகளை செய்து படம் எடுத்தால் அது களவாடப்படும்போது மனநிலை தவறிய ஒருவரின் அற்புதமான கேரக்டர் எனக்கு. ஏவிஎம்மில் மறுபடியும் நடித்தது மன நிறைவாக இருந்தது” என்றார்.