விஜய் நடிக்கும் 67-வது படம்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தால் உருவாக உள்ளது. இந்நிலையில் இப்படம் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் குறித்த செய்திகளும், அவரது படம் தொடர்பான சிறு செய்திகளும் பெரிய அளவில் பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில் விஜயின் 67வது படம் தொடர்பான மற்றொரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கென இருக்கும் பெறும் ரசிகர் கூட்டம் அவர் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து இணையத்தில் டிரெண்ட் செய்து வருகிறது. அப்படி இருக்க விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜயின் 67-வது படம்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தால் உருவாக உள்ளது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்திற்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைய உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டரில் ஜே.டி யாக அசத்திய விஜய், இதில் எந்த அவதாரம் எடுக்க உள்ளார் என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். மேலும், விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வினையின் 67-வது படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதியாகும் பட்சத்தில் கில்லியில் தொடங்கிய இந்த வெற்றி கூட்டணி திருப்பாச்சி, ஆதி, குருவி எனத் தொடர்ந்து, 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய் த்ரிஷா ஜோடியை ரசிகர்கள் திரையில் பார்க்கும் வாய்ப்பு அமையும். 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை தேவியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







