முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் நிலை குறித்து ஆய்வு- விஜய் சம்ப்லா

தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின மக்களின் நிலை குறித்து விரைவில் ஆய்வு
மேற்கொள்ளப்படும் என பட்டியலினத்தவர்களுக்கான தேசிய ஆணைய தலைவர் விஜய் சம்ப்லா தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள வங்கிகளில் இட ஒதுக்கீடு திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் படுகிறது என்பது தொடர்பாக பட்டியலின தேசிய ஆணைய தலைவர் விஜய் சம்ப்லா நேற்றும், இன்றும் ஆய்வு மேற்கொண்டார். இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ஆய்வு தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர
விடுதியில், விஜய் சம்ப்லா தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பட்டியலின தேசிய ஆணைய துணை தலைவர் அருண் ஹால்டர்
மற்றும் ஆணையத்தின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பட்டியலின தேசிய ஆணைய தலைவர் விஜய் சம்ப்லா,  வங்கிகளில் நடைபெறும் பாகுபாடு மற்றும் அதன் சார்ந்த அநீதிகள் குறித்து 2 நாட்கள் முக்கியமாக ஆய்வு செய்யப்பட்டது. வங்கியில் உள்ள பட்டியலின பணியாளர்களிடம் மத்திய அரசின் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப் படுகிறதா என்பது குறித்து கேட்கப்பட்டது.

இரண்டு நாள் ஆய்வில் பல விதமான குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறிய அவர் இந்த குறைபாடுகளை எந்த ஆணையமும் இதுவரை கண்டறியாமல் இருந்தது ஆச்சரியமாக உள்ளதாக கூறினார். நிரப்பப்படாத பணியிடங்கள், பதவி உயர்வு உள்ளிட்ட குறைபாடுகள் குறித்து இந்த ஆய்வில் தெரிய வந்ததாகவும் அவைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வங்கி நிர்வாகத்திடம் தெரிவித்திருப்பதாக கூறினார்.

பட்டியல் இன மக்கள் தொடர்பாக அரசு கொண்டுவந்துள்ள திட்டங்கள் குறித்து அலுவலர்களுக்கு எந்த தகவலும் விழிப்புணர்வும் இல்லை. குறிப்பாக பட்டியல் இனத்தவர்களுக்கான கடன் உத்தரவாத விரிவாக்க திட்டம் குறித்து தெரியவில்லை. இந்த திட்டம் மூலம் கடன் வழங்கும் தொகை 10 லட்சத்தில் இருந்து 5 கோடியாக அரசு
உயர்த்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் 4 சதவீத வட்டி மட்டுமே, உத்தரவாதம் தேவையில்லை, அரசே 80 சதவீத உத்தரவாதம் வழங்குகிறது. இந்த திட்டம் தொடர்பான தகவல் கூட பணியாளர்களுக்கு தெரியவில்லை என கூறினார்.

இது போல் ஏழை எளிய மக்கள் வாழ்வு மேம்பட கொண்டுவரப்பட்டுள்ள திட்டங்கள் கூட
தெரியவில்லை. மத்திய அரசின் திட்டங்கள் முறையாகவும் சரியாகவும் செயல்படுத்த வேண்டும் என வங்கி நிர்வாகத்திடம் தெரிவித்ததாக அதை நடைமுறைப்படுத்த அவர்கள் உறுதி அளித்துள்ளதாகவும் கூறினார்.

வங்கிகளில் ஆய்வு செய்தது மட்டும் இல்லாமல், ஆய்வில் கண்டறியப்பட்டவை தொடர்பாக அறிக்கை தயார் செய்து குடியரசு தலைவருக்கு சமர்ப்பிக்க உள்ளதாக கூறிய அவர், அந்த அறிக்கையை நாடாளுமன்றத்திற்கு குடியரசு தலைவர் அனுப்பி வைப்பார் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தாயாரின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி

Mohan Dass

தொலைத்தொடர்பு துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு

Halley Karthik

கலக்கத்தில் உலகம், கலாய்க்கும் நெட்டிசன்கள்!

எல்.ரேணுகாதேவி