உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் முஹரம் பண்டிகை கொண்டாட்டம் ரத்து செய்து உத்தரவிட்டதால் சர்ச்சை ; தடையை மீறி பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக முஹரம் பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமியர்கள்.
உலகப்புகழ்பெற்ற நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் முஹரம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனிடையே நாகூர் தர்காவின் புதிய நிர்வாகத்தில் இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதால், இவ்வாண்டு முஹரம் பண்டிகையை யார் நடத்துவது என சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் பாரம்பரிய முறைப்படி வருடாவருடம் முஹரம் பண்டிகையை நடத்தி வந்த தர்கா நிர்வாகிகளில் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப் துவா இது குறித்து நாகை கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த புகாரை விசாரித்த நாகை கோட்டாட்சியர் முருகேசன், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், தர்கா உள்ளேயே முஹரம் பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தினார். இதனால் நாகூர் தர்கா நிர்வாகத்தினரின் ஒரு தரப்பு சார்பாக முஹரம் பண்டிகையை ரத்து செய்து நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. இதனால் அங்கு மாவட்ட காவல்துறை சார்பாக போலீஸ் குவிக்கப்பட்டது. இந்த நிலையில், நாகூர் தர்கா நிர்வாகத்தின் டிரஸ்டிகளுள் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப் காவல்துறையின் தடையை மீறி முஹரம் பண்டிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.
இந்நிலையில் நாகூர் தர்கா உள்ளே அமைந்துள்ள யாஹுசைன் பள்ளி வாசலில் நடைபெற்ற முஹரம் சிறப்பு துவாவில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று மனமுருகி வழிபாட்டில் ஈடுபட்டனர். ஆண்டாண்டு காலமாக பாரம்பரியமாக நடந்து வந்த விழாவை புதிய நிர்வாகம் தடுக்க நினைப்பதாகவும், இன்று மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு முஹரம் பண்டிகை நடந்து வருவதாக தர்கா நிர்வாகிகளுள் ஒருவரான கலீஃபா மஸ்தான் சாஹிப் தெரிவித்தார். கோலாகலமாக நடைபெற்ற முஹரம் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் நாகூர் தர்காவில் குவிந்து வரும் நிலையில், நிர்வாகிகள் மத்தியில் நிலவி வரும் கருத்து வேறுபாடு காரணமாக தர்காவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.