நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு இலக்கிய விருது வழங்கிய புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம்!

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பாக நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு இலக்கிய விருது வழங்கி கௌரவித்தது. புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நேற்று (ஏப்.30) மாலை நடைபெற்ற…

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பாக நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு இலக்கிய விருது வழங்கி கௌரவித்தது.

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நேற்று (ஏப்.30) மாலை நடைபெற்ற விழாவில்,  முதலாம் ஆண்டு சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் 10 படைப்பாளர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா தலைமையில்  நடைபெற்ற இவ்விழாவில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,  படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

இவ்விழாவில் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி அறிமுகவுரை நிகழ்த்தினார்.

புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் நடத்திய இந்த விழாவில் நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் எழுதிய ‘தண்டனைக் களமாகும் பெண்ணுடல்’ என்ற புத்தகத்திற்காக இலக்கிய விருது வழங்கி பாராட்டப்பட்டது.

 

 

மேலும் அவர் உள்ளிட்ட 10 பேருக்கு இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டன.  விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:

  1.  வெற்றிச்செல்வன் ராசேந்திரன் (நாவல்)
  2.  புதுகை வெற்றிவேலன் (மரபுக் கவிதை)
  3.  கவிஞர் நயினார் (ஹைக்கூ)
  4.  சுகிதா சாரங்கராஜ் (கட்டுரை)
  5.  ஜி.வி.ரமேஷ்குமார் (தன்னம்பிக்கை நூல்)
  6.  சாரோன் (சிறுகதை)
  7.  கண்மணி ராசா (புதுக்கவிதை)
  8.  சாந்தி சந்திரசேகர் (சிறுவர் இலக்கியம்)
  9.  முருகேச பாண்டியன் (கட்டுரை)
  10.  க.அம்சபிரியா,  ச.ரமேஷ்குமார் (சிற்றிதழ்)

நிகழ்வில் எழுத்தாளர் நா. முத்துநிலவன்,  கவிஞர் ராசு கவிதைப்பித்தன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.