இலங்கையின் நிலமையை உணர்ந்து எந்த நாடும் முன் வராத நிலையில், தமிழ்நாடு அரசு உதவி செய்தமைக்காக இலங்கை பிரதமர் தன்னை தொடர்ப்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஜாபர்கான்பேட்டையில், ஓயாத உழைப்பின் ஒராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் , தமிழ்நாடு அரசு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டையை பொறுத்தவரை மிக நீண்ட காலத்துக்குப் பிறகு பல்வேறு வகையில் அரசின் சாதனை பரவி இருக்கிறது என்றார். சைதாப்பேட்டையில் உருவாகி வருகின்ற மருத்துவமனையின் வேலை மிக வேகமாக நடைபெற்று வருவதாக கூறிய அவர், புதிதாக உருவாகும் மருத்துவமனையை சென்னை மட்டும் இல்லை தமிழ்நாடே பேச போகிறது என்றார்.
ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் சிறுநீரக பிரச்சினைக்கு டயாலிசிஸ் செய்ய கூடிய வசதி இல்லை என்பதால் உயிரை மாய்த்து கொள்ளலாம் என அவர்கள் சென்று விடுவார்கள் அதனை போக்குவதற்கே சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் 10 டயாலிசிஸ் இயந்திரம் அமைய உள்ளது என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனை விரைவில் திறந்து வைக்க உள்ளதாக கூறிய அவர், அதன் மூலம் சைதையில் மக்கள் மற்றும் ஏழை மக்கள் பயன்பெறுவார்கள் என குறிப்பிட்டார்.
இன்று இலங்கை பிரதமர் தன்னை தொடர்பு கொண்டதாக தெரிவித்த அமைச்சர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்னேன் என்று சொல்லுங்கள் என கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். *உலகிலேயே முதல்முறையாக தங்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள் எந்த ஒரு நாடும் செய்யாத ஒரு உதவியை தமிழ்நாடு முதலமைச்சர் செய்தி இருக்கிறார் அதற்கு நாங்களும் இலங்கை மக்களும் நன்றி கூறினோம் என்று தன்னிடம் கூறியதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.







