தென்கொரிய நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங், 110 இன்ச் 4கே டிஸ்ப்ளே கொண்ட புதிய மைக்ரோ எல்இடி டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிவியின் விலை கார், வீடு ஆகியவற்றை விட அதிகம் என்பதால் தற்போது இது எல்லா இடங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சுமார் இரண்டு சகாப்தங்களாக தொலைக்காட்சி தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னணியில் இருந்து வரும் சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை தவிர, அதன் மிகப் பெரிய ஸ்மார்ட் டிவிகளுக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. உங்களில் பலர் சாம்சங்கின் ஸ்மார்ட் டிவியை உங்கள் வீடுகளில் வைத்திருப்பீர்கள். இந்த நிலையில், சாம்சங் நிறுவனம் புதிதாக மைக்ரோ எல்இடி டிவியை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிவியை சாம்சங்கின் ரீடெய்ல் ஸ்டோர் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் வாங்கலாம். இதன் விலை ரூ. 1 கோடியே 15 லட்சம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிறிய வீடு, 4 இருக்கைகள் கொண்ட கார் வாங்கி, குழந்தைகளை நல்ல பள்ளிக்கு அனுப்பி, சேமிப்போடு இருக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் ஆசையை தூண்டும் வகையில் உள்ளதாக பல்வேறு விதமான விவாதங்களை தூண்டியுள்ளது.
அந்த நிறுவனத்தின் இந்த விலை உயர்ந்த புதிய மாடலில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்.
தோற்றம் மற்றும் வடிவமைப்பு;
சாம்சங் நிறுவனத்தின் அல்ட்ரா பிரீமியம் பயனர்களை மனதில் கொண்டு சமீபத்திய மைக்ரோ எல்இடி டிவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிவி 110 அங்குல பெரிய திரையுடன் வருகிறது. இது உங்களுக்கு தியேட்டர் உணர்வை அளிக்கிறது. மேலும் இது சபையர் கண்ணாடியால் செய்யப்பட்ட 24.8 மில்லியன் மைக்ரோமீட்டர் அளவிலான LED களைக் கொண்டுள்ளது. இவை வழக்கமான LEDகளை விட 1/10 சிறியவை. Dolby Atmos மற்றும் M1 AI செயலியுடன் கூடிய WiFi இணைப்பு போன்ற அம்சங்களை இந்த டிவி கொண்டுள்ளது.
இந்த டிவியில் ஒவ்வொரு காட்சியின் விவரங்களும் தெளிவாகத் தெரியும். சாம்சங்கின் மைக்ரோ எல்இடி டிவி பெசல்-லெஸ் டிசைனுடன் வருகிறது மற்றும் 99.99 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோவைக் கொண்டுள்ளது. அதாவது திரையில் உள்ள படங்கள் எந்த விதமான பார்டர்களும் இல்லாமல் நிரம்பியுள்ளன. இதன் அளவு 422.5 x 1364.1 x 24.9 மிமீ மற்றும் ஸ்டாண்ட் இல்லாமல் 87 கிலோ எடை கொண்டது.
இந்த டிவி சஃபயர் மெட்டீரியலால் ஆனது என்று நிறுவனம் கூறுகிறது. பூமியில் இருக்கும் இரண்டாவது வலிமையான பொருள் இது. மைக்ரோ எல்இடி பயனர்களுக்கு அதிவேகமான பார்வை அனுபவம், துடிப்பான வண்ணங்கள் மற்றும் சிறந்த தெளிவு ஆகியவற்றை வழங்குகிறது.
டிவியின் அம்சங்கள்;
மைக்ரோ LED தொலைக்காட்சிகள் கூர்மையான மாறுபாடு, உகந்த உச்ச பிரகாசம் மற்றும் கம்பீரமான AI அப்ஸ்கேலிங் போன்ற அம்சங்களுடன் வருகின்றன. டிவியில் சிறந்த படத் தரத்திற்காக மைக்ரோ AI செயலி கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் 3டி சவுண்ட் வழங்கும் அரீனா சவுண்ட் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த Samsung TV 4K தெளிவுத்திறனை வழங்குகிறது . இந்த டிவி பயனர்களுக்கு நேரடி விளையாட்டு, டிவி நிகழ்ச்சிகள் மற்றும் வீடியோ கேம்களை விளையாடும் போது சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. இந்த டிவி சோலார் செல் ரிமோட் உடன் வருகிறது. இந்த பேட்டரி இல்லாத ரிமோட் வீட்டிற்குள் இருக்கும் லைட்டிலிருந்து சார்ஜ் செய்யப்படும்.
- பி.ஜேம்ஸ் லிசா