‘உங்கள் கனவுகளை இந்தியா முழுமைக்கும் விரித்துள்ளோம்’ -கருணாநிதி நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி…

உங்கள் கனவுகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறோம். அதனை இந்தியா முழுமைக்கும் விரித்துள்ளோம் என்று கருணாநிதிக்கு உருக்கமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர்  மு.கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி முதலமைச்சர்…

உங்கள் கனவுகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறோம். அதனை இந்தியா முழுமைக்கும் விரித்துள்ளோம் என்று கருணாநிதிக்கு உருக்கமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர்  மு.கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை ஓமந்தூரார் வளாகம் முதல் அண்ணா சதுக்கத்தில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது.

மறைந்த திமுக தலைவர் மு.க. கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆடியோ செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், “நூற்றாண்டு விழ நாயகரே உங்களைக் காண அணிவகுத்து வருகிறோம். உங்களுக்குச் சொல்ல ஒரு நள்ள செய்தியை கொண்டு வருகிறேன். உங்கள் கனவுகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறோம் என்பதுதான் அந்த நல்ல செய்தி. நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை தான் நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். 95 வயது வரை நாளெல்லாம் உழைத்தீர்கள். இனம், மொழி, நாடு காக்க ஓய்வெடுக்காமல் உழைத்தீர்கள். உங்கள் உழைப்பின் உருவக வடிவம்தான் இந்த நவீன தமிழ்நாடு என அதில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.