தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை கடந்து ஒரு பவுன் தங்கம் ரூ.43,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் தேவை அதிகமாக காணப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. திருமணம் போன்ற வீட்டு விஷேங்களுக்கு தங்கம் அதிகமாக வாங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா பரவலுக்கு பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கம் பவுன் ஒன்றிக்கு ரூ.38 ஆயிரத்தில் இருந்து. இந்நிலையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருகிறது.
தங்கம் விலை கடந்த 2 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. விலை அதிகரித்து வந்த நிலையில், நேற்று சற்று குறைந்து காணப்பட்டது. இந்தநிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.43,040க்கு விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,380க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.75க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ. 43,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.