முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

கொடியேற்றத்துடன் தொடங்கியது பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் தைப்பூச விழா

அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் தைப்பூச விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. “அரோகரா” கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே முருகனின் ஆறாவது படை வீடாக போற்றப்படக்கூடிய பழமுதிர்ச்சோலையில் பத்து நாட்கள் நடைபெறும் தைப்பூச விழா கொடியேற்றத்துடன்
இன்று தொடங்கியது. இதனையொட்டி மூலவரான சோலைமலை முருகனுக்கு, பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகமும், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைத் தொடர்ந்து திருக்கோயில் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மயில் கொடியேற்றி, மலர் மாலை சாற்றி, அபிஷேக தீபாரதனையும் செய்தனர். அப்போது கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து சுவாமி திருக்கோவில் வளாகத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.

இன்று தொடங்கி வருகின்ற 04ம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறும் இந்த தைப்பூச விழாவையொட்டி, வள்ளி தெய்வானையுடன் சமேத சுப்பிரமணியர், அன்னம், சிம்மம்,யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினசரி எழுந்தருளி, வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும், இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான “தங்கத்தேரோட்டம்” வருகின்ற 03ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வருகின்ற 04ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவடைய உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் துணை ஆணையர் ராமசாமி தலைமையில்
திருக்கோவில் கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மறைந்த கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி

Gayathri Venkatesan

பழைய பொருட்களை விலைக்கு வாங்கும் மாநகராட்சி எது ?

Halley Karthik

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

G SaravanaKumar