ஆஸ்கர் மேடையில் RRR படத்தை பாலிவுட் படம் என்று அழைத்த தொகுப்பாளர் ? கொதித்தெழுந்த நெட்டிசன்கள்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் பிரமாண்டமாக நடைபெற்ற 95வது அகாடமி விருதுகளை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மல் என்பவர், விழாவின் தொடக்க உரையில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை பாலிவுட் திரைப்படம் என…

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் பிரமாண்டமாக நடைபெற்ற 95வது அகாடமி விருதுகளை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மல் என்பவர், விழாவின் தொடக்க உரையில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை பாலிவுட் திரைப்படம் என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகமாக நடைபெற்றது. வண்ணமயமான அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இந்த விருதை இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றனர். 2009ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ஜெய் ஹோ’ பாடலுக்கு ஆஸ்கர் கிடைத்த நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு கீரவாணியின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

இந்திய திரையிசை உலகில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானுக்கு பிறகு ஆஸ்கரை கையில் ஏந்திய இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை கீரவாணி என்கிற மரகதமணி பெற்றுள்ளார். இந்தியாவையே பெருமை படுத்தும் வகையில் இப்படியொரு விருது கிடைத்ததற்காக, ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ஒட்டு மொத்த திரையுலக ரசிகர்களும் ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கும், இசையமைப்பாளர் கீரவாணிக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 95வது அகாடமி விருதுகளை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மல், விழாவின் தொடக்க உரையில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை பாலிவுட் திரைப்படம் என குறிப்பிட்டுள்ள நிகழ்வு தென்னிந்திய திரையுலக ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் அப்படி கூறியதை கேட்டு ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை எப்படி பாலிவுட் படம் என்று அழைக்கலாம் என நெட்டிசன்கள் பலரும் கொதித்தெழுந்து, அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பல்வேறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ரசிகர்களின் இவ்வளவு பெரிய கோபத்திற்கு மிக முக்கிய காரணம் , இந்திய சினிமா என்றாலே இந்தி படங்கள்தான் என்றிருந்த நிலை மாறி தற்போது தென்னிந்திய திரைபபடங்கள் இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் வளர்ந்து பாராட்டை பெற்று வருகிறது என்பதால்தான்.

ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்திய படமாகவும், தெலுங்கு படமாகவும் அடையாளப்படுத்தப்பட்டு வரும் வேளையில், சர்வதேச அளவில் நடைபெறும் ஒரு ஆஸ்கர் விழா மேடையில் தொகுப்பாளர் வெகு சாதாரணமாக பாலிவுட் திரைப்படம் என்று ஆர்ஆர்ஆர் படத்தை அழைத்திருப்பது சர்ச்சைகளையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்தியிருப்பதாகவும், தொகுப்பாளர் அவ்வாறு அழைத்ததை ஆர்ஆர்ஆர் படக்குழுவே விரும்பவில்லை எனவும் ரசிகர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு ஏற்றார் போல் படத்தின் இயக்குநரான ராஜமௌலி ஆர்ஆர்ஆர் திரைப்படம் முழுக்க முழுக்க தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட படம் என்பதால், இது டோலிவுட் படம் மட்டுமே. அதனால் எங்களது ஆர்ஆர்ஆர் படத்தினை இந்திய படம் என அழைக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தியிருந்தார் என்பது முக்கியமான ஒன்று.

ஆஸ்கார் விருது விழாவின் தொகுப்பாளராகிறார் தீபிகா படுகோனே – ரசிகர்கள் உற்சாகம் | News7 Tamil

இதுதவிர பெரும்பாலானோர் ஆர் ஆர் ஆர் திரைப்படம் பாலிவுட் படமல்ல. அது தெலுங்கில் உருவான இந்திய படம் என சற்று கட்டமாகவே தங்களது கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். 95-வது ஆஸ்கர் விழா மேடையில் விருது வழங்குபவர்களில் ஒருவராக இருக்க கூடிய இந்திய நடிகை தீபிகா படுகோனே நாட்டு நாட்டு பாடலுக்கான நேரலை நடனத்திற்கு அழைக்கும் போது , ஆர்ஆர்ஆர் படத்தினை இந்திய தயாரிப்பில் உருவான தெலுங்கு படம் என்றே குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.