பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக முதலமைச்சர் இருப்பார்- அமைச்சர்

நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.  கோவை மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் 19.70 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி…

நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

கோவை மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் 19.70 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டும் பணியை  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அமைந்நர் செந்தில் பாலாஜி, ரூ.113 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க பணிகள் துவக்கி வைக்கப்பட்டள்ளன. குடிநீருக்காக ரூ.38 கோடி மதிப்பிலான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க ரூ.143 கோடி டாலருக்கு நிலக்கிரி குறைவான விலையில் நாங்கள் வாங்கியிருக்கிறோம். பாஜகா ஆளும் மாநிலங்களில் எவ்வளவு கொடுத்து நிலக்கரி வாங்கப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் அறிவிக்கும் 39 வேட்பாளர்களும் மகத்தான வெற்றியை பெறுவார்கள். பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக நமது தமிழக முதல்வர் இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்தார்.


மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சில பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர். எனக்கு வேலை இருக்கிறது. வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு நான் பதில் சொல்ல அவசியமில்லை. அவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் இப்போது கூட எடுக்கலாமே. நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து கொண்டு எப்படி எதிர்கட்சியாக இருக்க முடியும். மட்ட ரகமான அரசியல்வாதி அண்ணாமலை என தமிழக பாஜக தலைவரை அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.