“காவல்துறை சமூகத்தின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு அரண்” – மு.க.ஸ்டாலின்!

காவல்துறை சட்டத்தை நிலைநாட்டும் அமைப்பு மட்டுமல்ல, நமது சமூகத்தின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு அரண் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “காவல்துறை: சட்டத்தை நிலைநாட்டும் அமைப்பு மட்டுமல்ல; நமது சமூகத்தின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு அரண்!

காவலர்கள் ஆற்றும் கடமையையும் அவர்களது அளப்பரிய தியாகத்தையும் #PoliceCommemorationDay-இல் நன்றியோடு நினைவுகூர்வோம்!

மக்களின் பாதுகாப்புக்காகவும் அமைதியான வாழ்வுக்காகவும் ஆபத்துகளை எதிர்கொண்டு, அர்ப்பணிப்புணர்வோடு கடமையாற்றி இன்னுயிர் ஈந்த காவலர்கள் அனைவருக்கும் எனது வீரவணக்கம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.