தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “சென்னைக்கு மழை அதிகமாக இருக்கும் என்று சொல்லி உள்ளார்கள். முதலமைச்சர் அவர்கள், பொறுப்பு அமைச்சர்கள் அனைவரும் சென்னை வர உத்திரவிட்டுள்ளார். அரசின் சார்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நாங்கள் மேற்கொண்டு இருக்கோம். நிச்சயமாக மக்களுக்கு மருத்துவ சேவை தொடர்ந்து இடைவிடாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்.
கூட்டுறவு கடையில் தரமான அரிசி தான் கொடுத்திருக்கிறோம். தடையற்ற மின்சாரம் நமக்கு கிடைக்கக்கூடிய அளவில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மின்சாரத்துறை அமைச்சரோட பேசி இருக்கிறோம். மழைக்காலத்தை ஒட்டி தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வீடு வீடாக சென்று ஆய்வுகள் மேற்கொள்வதும், தேங்காய் சிரட்டைகள், காலி தொட்டிகள்,பழைய டயர்கள், போன்றவை இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சல் பரவும் நிலை வந்தால் பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அனைத்து மருத்துவமனைகளிலும் உரிய ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இன்னொரு புறம் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்ல இருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை சிகிச்சைக்காக டெங்கு நோய் வந்தால் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் நம்ம மருத்துவர்களுக்கும் ட்ரெய்னிங் கொடுத்திருக்கிறோம். அதுமட்டுமில்லாம இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்துல கடையநல்லூர் பகுதியில் டெங்கு நோய்க்காக தடுப்பூசியை செயல்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் எடுத்திருக்கிறோம்.
மருத்துவர்களைப் பொறுத்தவரை போதிய அளவில் உள்ளார்கள். மருத்துவ கட்டமைப்பில் ஒரு பெரிய ஒரு கேப்பா இருந்ததே செவிலியர்கள் பற்றாக்குறைதான். அதனால் மாநிலம் முழுவதும் 4,724 அந்த செவிலியர் காலி பணியிடங்களுக்காக மாவட்ட நலச்சங்கம் மூலமாக இதுவரை இல்லாத வகையில நேர்மையான முறையில் வெளிப்படையான முறையில் அவங்களை தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தி உள்ளோம். மருத்துவத்துறையை பொருத்தவரை தயாரான நிலையில் உள்ளோம். திருச்செங்கோட்டில் சாக்கடைகள் மழை நீர் வடிகால்களை சீரமைப்பதற்கு 8 கோடி மதிப்பீடு திட்டங்கள் தீட்டப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
செவிலியர் கல்லூரிகளை அமைக்க லஞ்சம் பெறுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல். இப்போது மட்டுமல்ல எப்போதும் தமிழ்நாடு அரசில் லஞ்சம் கையூட்டல் என்பது இருக்காது. இது போன்ற தவறான தகவல்களை பரப்புவதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.




