முக்கியச் செய்திகள் தமிழகம்

சாதி மறுப்பு திருமணம் செய்தவரின் அவல நிலை!

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். 

தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் அன்பழகன் என்பவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த கோரிக்கை மனுவில் தேனி மாவட்டம் உப்பு கோட்டையில் வசித்து வரும் நான் எனது பெற்றோர் செல்வராஜ், சத்யா இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். மேலும் இருவரும் வெவ்வெறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்பாவின் சொந்தமான தோட்டம் மற்றும் வீட்டிற்கு செல்ல விடாமல் எனது அப்பாவின் சகோதரி அரவர் அம்மாள், அவரது கணவர் சின்னச்சாமி, மகன் சுரேஷ், அவரது மனைவி நித்தியா மற்றும் எனது அப்பாவின் சார்பாக செல்லச்சாமி அவரது மனைவி விஜயலட்சுமி அவரது மகன் கோகுல் பாண்டி ஆகிய ஏழு நபர்களும் எங்கள் பாக நிலம் மற்றும் வீட்டிற்கு செல்ல விடாமல் தடுத்து வேறு சாதியில் திருமணம் செய்த உனக்கு சொத்தில் பங்கு இல்லை இயலாது எனவும், மறுப்பு திருமணம் செய்தவர்கள் என்று தகாத வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியும் அடித்தும் விரட்டி விட்டார்கள்.

மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அப்பாவிற்கு சாதகமான இடம் என தீர்ப்பு ஆணையும் பெறப்பட்டுள்ளது. அப்பாவின் பெயரில் பட்டாவும் உள்ளது. எனது பெயரில் இடத்தின் பத்திரமும், வில்லங்கச் சான்றும், அம்மாவின் பெயரில் வீட்டு பத்திரமாக உள்ளது. வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரி அப்பாவின் பெயரில் தான் உள்ளது. வேறு சமூகத்தில் எனது தந்தை திருமணம் செய்ததால் அவருடைய தயவில் இருந்தும் எந்த ஆதரவும் இல்லை.

மின்னஞ்சல் மூலம் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும், தமிழக செயலாளருக்கும், தமிழக காவல்துறை தலைவருக்கும், தமிழக வருவாய்துறை செயலாளருக்கும், தமிழக மனித வள உரிமை ஆணையருக்கும், பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை அலுவலர் தேனி மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், தேனி மாவட்ட வருவாய் அலுவலருக்கும், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியருக்கும் இணைய வழியின் மூலம் புகார் மனு அளித்துள்ளேன்.

புகார் அளித்து 20 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் தெரியவில்லை சாதி மறுப்பு திருமணத்தை அரசு அங்கீகரித்த நிலையில் சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாப்பதும் எங்களுக்கு உரிய பாகம் மற்றும் வீட்டை மீட்டுத் தரவும் எங்களையும் சமூகத்தில் நல்ல நிலையில் வாழ வழி ஏற்படுத்தி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார். இவருடன் தாய், தந்தை சேர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆன்லைன் சூதாட்ட தடை: அவசர சட்டம் பிறப்பிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Web Editor

பரந்தூர் விமான நிலைய முழு பொறுப்பும் மாநில அரசிடம் உள்ளது- மத்திய அரசு

G SaravanaKumar

34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டப்பேரவை செல்லும் ஈவிகேஎஸ் இளங்கோவன்

Web Editor