எதற்கும் துணிந்தவனை தொடர்ந்து, பாலா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் first look போஸ்டர் வெளியாகியுள்ளது. நந்தா, பிதாமகனை தொடர்ந்து 18 ஆண்டுகள் கழித்து பாலாவும் சூர்யாவும் கைகோர்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பின் போது சூர்யாவுக்கும், பாலாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து படப்பிடிப்பு தளத்தில் இருந்து சூர்யா கோபமாக வெளியேறிவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், பாலாவின் ‘சூர்யா 41’ படப்பிடிப்பு பாலாவால் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் எனவும், அதன் விளைவாக இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு மோதலாக மாறியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் வெற்றிகரமாக முடிந்துவிட்டது எனவும், கூடிய விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கப்படும் என்றும் சூர்யா தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ‘இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று போட்டிருந்தாலும் நம்பியிருப்போம், ஆனால் கோவாவில் பாலா படம் எடுப்பார் என்று போட்டீர்களே அதைத்தான் நம்ப முடியவில்லை. அர்ஜூன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மாவையே பாலா ஸ்டைலில் எடுக்கபோயிதான் படமே பாதியில நின்னுச்சி. கோவாவில் படம் எடுக்குறது பாலாவோட ஸ்டைல் இல்ல!.Something is wrong! சண்டையே நடக்கலண்ணு சொல்ல வர்றீங்க சரி, ஆனா கொண்டைய மறந்துட்டீங்களே பாஸ்’ என இணையவாசிகள் கலாய்த்து வந்தனர்.
இத்தனை சிக்கல்களை தாண்டி ஒருவழியாக பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று first look போஸ்டரையும் வெளியிடப்பட்டுள்ளது படக்குழு. ‘வணங்கான்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் first look-ல் கிழிந்த கோணிப்பையின் வழியாக பாதி முகத்தை காட்டும் சூர்யா, விக்ரம் படத்தில் வந்த ரோலக்ஸ் கெட்டப்பில் உள்ளார். பாலா பட ஷூட்டிங்கில் இருந்து பாதியில் சென்று நடித்துக்கொடுத்ததால் அதே கெட்டப்பில் சிறிய மாற்றங்கள் மட்டும் செய்து விக்ரம் படத்தில் ரத்தத்தை தெறிக்கவிட்டு பல்லை விளக்கியுள்ளார் சூர்யா. இதனால் கூட பாலாவுக்கும் சூர்யாவுக்கும் மனக்கசப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.
இப்படத்தின் தலைப்பு ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ‘வணங்கான்’ எனும் சிறுகதையிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அச்சிறுகதையின் படி அலுவலகத்தில் அடிமை போல் நடத்தப்படும் ஒருவன் அதிகாரத்திற்கு எதிராக கிளர்ந்தெழுவதாக கதை அமைந்திருக்கும். அதே கதையை inspiration-ஆக வைத்துக்கொண்டே பாலா ‘வணங்கான்’ திரைக்கதையை உருவாக்கியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாகும் பாலா- சூர்யா படம் என்பதால் இதற்கான எதிர்ப்பார்ப்பும் பல மடங்கு எகிறியுள்ளதை அடுத்த இந்த first look poster இணையத்தில் அசுர வேகத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.







