குற்றம்

விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் காவல்நிலைய மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

முசிறி அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் காவல்நிலைய மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு நாகராஜ் என்வரின் 16 வயது மகளை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், நாகாராஜ் கொடுத்த புகாரின்பேரில், திருப்பூரில் இருந்த பிரசாந்தை, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதைத் தொடர்ந்து, பிரசாந்தின் மனைவியும் குழந்தையுடன் அங்கு சென்றார். போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விடுவர் என அஞ்சிய பிரசாந்த், காவல் நிலைய மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement:
SHARE

Related posts

காவல் நிலையத்தில் காதல் ஜோடிக்கு கத்திக்குத்து

Ezhilarasan

கோயிலுக்கு சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை

Saravana Kumar

குளிர்பானம் குடித்ததால் சிறுமி உயிரிழந்தாரா? போலீசில் புகார்

Gayathri Venkatesan

Leave a Reply