அதிமுகவும் பாஜகவும் மத அரசியல் செய்து வருவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற முழக்கத்தோடு பல்வேறு மாவட்டங்களில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், இன்றும், நாளையும் கரூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், இன்று கரூர் மாவட்டம் புங்கம்பாடியில் மக்கள் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினரை பாதிக்க கூடிய அனைத்து சட்டங்களையும் பாஜக கொண்டு வந்துள்ளது. அதற்கு எதிராக டெல்லி வரை சென்று திமுகதான் போராடியது. பாஜகவும் அதிமுகவும் மத அரசியல் செய்து வருகின்றன. மேலும், கொரோனா காலத்தில் பணம் இல்லை என்று கூறிய மத்திய அரசுக்கு, தற்போது புதிதாக 10 ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் கட்டுவதற்கு மட்டும், பணம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பினார்.







