அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோம்பைப்பட்டி ஊராட்சியின் வெங்கடாஸ்திரிகோட்டை கிராமத்தில் சுமார் 28 சென்ட் மதிப்புள்ள அரசு நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியும், தங்களது கிராமத்தில் பழைய தொலைக்காட்சி பெட்டி வைக்கும் அறை இருந்த இடத்தை இடித்து தள்ளிவிட்டு தனக்கு சொந்தமாக அந்த நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வத்தலகுண்டு சென்று மனு அளித்தனர்.
ஆனால், ஆக்கிரமித்தவருக்கு சாதகமாக வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி வெங்கடாசரிகோட்டை கிராம பொதுமக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு நடவடிக்கை எடுக்கும் வரை போராடுவோம் என தரையில் அமர்ந்து போராட்டம நடத்தினர். இதனால் அப்பகுதியில் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
—அனகா காளமேகன்







