சிவகாசி காரனேஷன் பேருந்து நிறுத்தம் அருகே சரக்கு லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் அதிஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.
சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டி அட்டை மில்லில் இருந்து பேப்பர் ரீல் ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு லாரி காரனேசன் பேருந்து நிறுத்தம் அருகே வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் விஷாந்த் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினார்.
இதனையடுத்து விரைந்து வந்த சிவகாசி நகர காவல் நிலைய போலீசார் ஜேசிபி உதவியுடன் நீண்ட நேரம் போராடி லாரியை தூக்கினார்கள். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
—-கா. ரூபி







